Wednesday, August 5, 2020

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி



🔱 பகவத் கீதையின் 10 ஆவது அத்யாயமான விபூதி யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், முனிவர்களில் நான் வியாசன் என்று கூறுகிறார். மஹாபாரதக் கதை எழுதிய வியாசரின் மகனே ஸ்ரீ சுகப் பிரம்மம். கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர், அவளிடம் மனதைப் பறி கொடுத்தார். அவரிடம் இருந்து தப்பிக்க கிளியாக மாறினாள். ஆனாலும் முனிவரின் தபோ பலத்தால் கர்ப்பம் தரித்தாள். ரிஷியின் கர்ப்பம் ஆனதால் உடனடியாக அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான். குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. சுகா என்றால் கிளி. அதனால் கிளி முகம் கொண்ட அக்குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர். பிறந்த உடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது . எள் முனையளவு கூட களங்கமில்லாத மனதுடையவர் ஆக இருந்தார். ஸ்ரீ  சுகரை தொடர்ந்து த்யானித்தாலே நமக்கு பரம ஞானம் சித்திக்கும். சதா சர்வ காலமும் ப்ரஹ்மத்திலேயே லயித்த ஒரே ரிஷி சர்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு பிறகு இவர் ஒருவர் மட்டுமே.

🔱 தந்தையை மிஞ்சிய தனயனாய் அபார ப்ரம்ம ஞானம் மிக்கவராய் விளங்கினர் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி. 

🔱 இவர் தேவ குருவான ப்ரஹஸ்பதியின் சிஷ்யர்.

🔱 இவரின் தந்தையான ஸ்ரீ வியாச பகவான் தனது மகனை அழைக்க, சுகர் வரும்பொழுது அவர் கூட மரம் செடி, கொடிகள் என்று சகல ஜீவராசிகளும் அனைத்தும் நடந்து வந்தன. ஏனென்றால் அனைத்திலும் அவர் பிரம்மத்தை கண்டார். இதனால் தனக்கு ஞானம் ஏற்பட்டதாக சற்று கர்வம் அடைந்தார். அவரது கர்வத்தை போக்க நினைத்த வியாச பகவான் உடனே மிதிலா புரி வேந்தனும் லோக மாதா சீதையின் தந்தையும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மாமனாருமான ஸ்ரீ ஜனக மகாராஜனிடம் ஞானம் பெற்று வா என்று அனுப்பி வைத்தார். ஜனகர் அவருடைய அகந்தையை சற்று அகற்றி அவருக்கு ஞானத்தை புகட்டினார். இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் ஸ்ரீ ஜனகர் எப்படிப்பட்ட ஞானி என்று.

🔱 திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியின் மாமனாரான ஆகாசராஜனின் குலகுரு. பத்மாவதி (திருமலை ஸ்ரீ வேங்கடவனின் மனைவி) என்று ஆகாசராஜனின் குழந்தைக்கு தெய்வீக திருநாமம் சூட்டிய பெருமைக்குரியவர். 

🔱 பொதுவாக குரு பரம்பரை பின்வருமாறு வரையறுக்கபட்டுள்ளது:

நமது குரு பரம்பரையில் சுகருக்கு சிறப்பான இடம் உண்டு. ஸ்ரீ சதாசிவன் - ஸ்ரீமன் நாராயணன் - சதுர் முக ப்ரஹ்மா - வசிஷ்டர் -  சக்தி - பராசரர் - வ்யாஸர் -  சுக ப்ரஹ்மம் - கௌட பாதர் - கோவிந்தா பகவத் பாதர் - ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யர் என்று வருகிறது.

தினமும் அதி காலையில் இந்த குரு பரம்பரையை நினைத்து வணங்கினால் சகல தேவதைகளை வணங்கிய பலன் கிடைக்கும்.
 
🔱 இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது பிரதான சீடர் ஆதி சங்கரர். 

🔱 அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீஷத்து, ஓர் முனிவரின் சாபத்தால் ஏழு நாட்களில் உயிர் போகும் என்பதறிந்து, அவனுக்கு சப்தமாகமாக (7 நாட்களும் க்ரம பாராயணம்) செய்வித்து ஸ்ரீ வைகுண்ட பிராப்தி அளித்த பொழுது அவருக்கு வயது 16 மட்டுமே. சப்த ரிஷிகளே எழுந்து நின்று மரியாதையை செலுத்தும் அளவிற்கு  அபரோக்ஷ மகா மகா ஞானி. இன்று ஸ்ரீமத் பாகவத சப்தாக பாராயணம் என்ற முறைக்கு அன்றே வித்திட்ட ஒரே ரிஷி ஸ்ரீ சுக பிரம்மம்தான். இவர் ஒருவரால்தான் ஸ்ரீமன் நாராயணனின் அனந்த கல்யாண குணங்களையும், விசேஷங்களையும் மற்றும் லீலைகளையும் கூறும் ஸ்ரீமத் பாகவதம் என்னும் மகா காவியம் நமக்கு கிடைத்தது.

🔱 இந்து தர்மத்தை நிலைக்க செய்ததில் பெரும் பங்களித்த ஆதி சங்கரரின் குருவுக்கு குருவானவர் சுகப்பிரம்ம ரிஷி.


ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

சுகரூபாய வித்மஹே சுபீக்ஷ காரகாய தீமஹி
தன்னோ சுகப்பிரம்ம ப்ரசோதயாத்!





17 comments:

  1. A very beautiful write up on Guru Suka rishi. For a new comer to spiritual reading it is giving a good introduction to the Guruparampara especially about the Gurus who drew the initial auspicious lines of Advaita.

    ReplyDelete
  2. A very beautiful write up on Guru Suka rishi. For a new comer to spiritual reading it is giving a good introduction to the Guruparampara especially about the Gurus who drew the initial auspicious lines of Advaita.

    ReplyDelete
  3. Excellent & informative article on. the great sage Sukhabrahmam. Thanks.

    ReplyDelete
  4. வியாசர் மகனாகவும் ப்ரஸ் பதியின் சிஷ்யனாகவும் மற்றும் சிவபெருமானுக்கு இணையாக சதாசர்வகாலம்‌ப்ரஹ்மத்தில் லயிக்கும் வல்லமை உடையவர்‌ சுகபிரம்மரிஷி இன்று தான் அடியேனுக்கு தெரியவந்து உள்ளது அரிதான விபரங்களை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அரிதான விபரங்களை தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சுகப்பிரம்ம ரிஷி பற்றி தெரியாத பல தகவல்களை அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  7. சாய் ராம். தெரிந்த சில தகவல்களை கூடுதல் விவரங்களுடன் மீண்டும் அறிதல் அற்புதம். ஜெய் சாய் ராம்.

    ReplyDelete
  8. சுகப்பிரம்ம ரிஷி அவர்களின் வரலாறு பற்றி இதுவரை எனக்கு தெரியாமல் இருந்தது தற்போது தான் அவருடைய பிறப்பு பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டேன் இதுவரை அவரோ எல்லாம் தெரிந்த ஒரு முனிவர் ரிஷி என்பதைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தேன் தற்பொழுது அவரது அனைத்து சிறப்புகளையும் வரலாற்றையும் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. அருமை,தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு. நன்றிகள்.

    ReplyDelete
  11. Good Article having more information.

    ReplyDelete
  12. Good one Raghu. Pls mention few popular authorings from Suga Brahmam Rishi like ithihaasa/puranaa

    ReplyDelete
  13. நன்றி ஐயா. அருமையான விளக்கங்கள். ஒரு சந்தேகம் உள்ளது. வியாச மகிரிஷி மகாபாரத காலத்தில் உள்ளவர். அவர் எப்படி ஶ்ரீசுகரை ஜனக மஹாராஜாவிடம் அனுப்பினார். அதற்குரிய விளக்கம் தயவுசெய்து தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜனக மகாராஜா நீண்ட ஆயுள் உடையவர். அந்த காலத்தில் அனைவருக்கும் வயது பல்லாயிரக்கண ஆண்டுகளாக இருந்தது. ஏன் ஸ்ரீ ராமரே மனிதராக பிறந்து 11000 வருடங்கள் சக்கரவர்த்தி திருமகனாக இருந்து இந்த பூமியை ஆள வில்லையா?

      Delete