லோக மாதா ஸ்ரீ
ராஜமாதங்கி என்னும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி ஸ்ரீ வித்யா உபாஸனையில் பிரதானமாக
விளங்குபவள். ஞானம், வித்தை மற்றும் கலைகளின் அதிபதி. கேட்போருக்கு கேட்டவற்றை
அள்ளி தரும் கற்பக வ்ருக்ஷம்.
ஸ்ரீ
லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன.
அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள
கதம்பவனத்தில், (ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம், அஷ்டதளபத்மம்,
ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச்
சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன
மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில்,
ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி
வீற்றிருந்தருளுகிறாள்.
கஸ்தூரி திலகம்
அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும்
புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன, கதம்ப மாலை துளசி மாலை முதலியன
அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம்
செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை'
எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு
அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.
நம் உடலில்
அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி'
சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.
மந்திர சாஸ்திர
உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி
மந்திரம், ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம், பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்
உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும். மாதங்கியின்
மந்திரம், 98 எழுத்துக்கள் கொண்டதாகும். மாதங்கி மந்திரம் ஒருவருக்கு
சித்தியாகிவிட்டால் உலகில் உள்ள மற்ற வேத மந்திரங்கள் உட்பட அனைத்துமே ஒரு முறை
படிப்பதாலேயே சித்தியாகும் என மதங்கமனுகோசம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சியாமளா தேவியின்
ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும்
பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.
கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள்.
லலிதா
திரிபுரசுந்தரி வாசம் புரிந்தருளும் ஸ்ரீநகர ஸாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் பொறுப்பு
இந்த மாதங்கியுடையதே. மந்திரியின் தயவு இருந்தால் ராஜாவின் அன்புக்குப்
பாத்திரமாவதைப் போல மாதங்கியின் தயவை நாடியவன், லலிதையின் அருளை அடைவான் என்கிறது
தந்த்ர சாஸ்திரம். இவளால் செயல்படுத்த முடியாதது என்று எதுவுமே இல்லை.
இவளை அனாஹத சக்கரம்
என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும். இவளது அங்க தேவதை லகுஷ்யாமளா, உபாங்க
தேவதை வாக்வாதினி, பிரத்யங்க தேவதை நகுலீ. இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை,
கலைகளில் தேர்ச்சி, சங்கீத ஞானம், சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.
`ராஜ ஷ்யாமளா’
என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் இவளைக் கொண்டாடுகிறது. சாக்த வழிபாட்டில் சப்த
மாதாக்களில் ஒருவராகவும் (சாக்த வழிபாட்டில் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி,
இந்த்ராணி, சாமுண்டி, வாராஹி, சியாமளா ஆகியோரை சப்த மாதர் என்பர்.),
தசமகா வித்யாக்களில் ஒன்பதாவது தேவியாகவும் ராஜ மாதங்கி இருந்துவருகிறாள்.
ஒரு பிரளய
காலத்தில், பிரம்மதேவன் யானை வடிவில் சிவபெருமானைக் குறித்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது பிரம்மனின் மனதிலிருந்து ஒரு மகன் தோன்றினார். அவரே மதங்கர். (மதங்கம் என்றால் யானை.) பிரம்மன் மதங்கரிடம் “தவம் செய்’ என்று கூற, அது பிரளய காலமாதலால் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அப்போது அங்கு வந்த நாரதர், “”பிரளய காலத்திலும் அழியாத இடம்
திருவெண்காடு. எனவே அங்கு சென்று தவம் செய்” என்று கூறினார். அதன்படியே திருவெண்காடு
சென்று தவம் மேற்கொள்ள, மதங்கரின் தவத்தைக் கலைக்க மன்மதன் வந்தான். அவனை, “”சிவனாரது
நெற்றிக்கண் சுடரால் எரிவாய்” என சபித்தார் மதங்கர். அடுத்து மகாவிஷ்ணுவானவர்
மோகினி வடிவில் வர, “”திருவெண்காட்டில் மோகினி வடிவுடனேயே இருப்பீர்” என்றார்.
மதங்கரின் தவத்தில் மகிழ்ந்து அவர்முன் தோன்றிய விநாயகர், அஷ்டசித்திகளையும் மதங்கருக்கு
வழங்கினார். இறுதியில் சிவபெருமானும் தரிசனம் தந்தருளினார்.
ஸ்ரீ மதங்க முனிவர் (ராமாயண
காலத்தில், ராமரின் வரவுக்காகக் காத்திருந்த சபரியின் குருநாதர் இவரே.)) மதங்க முனிவரின்
தந்தை தேவி உபாசகர். மதங்கருக்கு இமவான் நண்பன். இமவான் தவம் செய்து பார்வதி தேவியையே
மகளாகப் பெற்றான் அல்லவா? அந்த நினைவு மதங்கருக்கு வரவே, கடும் தவம் மேற்கொண்டு அன்னையின்
அருள் தரிசனத்தைப் பெற்றார். ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை
(காமோயோனி; கமலா வஜ்ரபானிர் குஹஹஸ மாதரிஷ்வ அப்ரம் இந்த்ரா/புனர் குஹ ஸகலா மாயாய க
புருசேச விஸ்வமாதாதி வித்யா//) அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின்
தரிசனம் பெற்று அவளையே தன் மகளாக பிறக்க வேண்டும் என்று வரம் பெற்றார். அதன் பயனாக
ஸ்ரீ ராஜமாதங்கி மதங்கர்- சித்திமதி தம்பதிக்குத் திருமகளாக- அதிகாலையில்,
மதங்க தீர்த்தத்தில் முகிழ்த்த நீலோத்பல மலரில் ஆடி மாதம்
வெள்ளிக்கிழமை அன்று சியாமளா அம்சமாக உதித்தாள் அம்பிகை. அந்தக் குழந்தையை
மதங்கர் அன்புடன் வளர்த்தார் என்கிறது திருவெண்காடு தலபுராணம். (திருவெண்காட்டிலிருந்து
மூன்று கிலோமீட்டர் தொலைவில் மதங்காஸ்ரமம் உள்ளது.)
அப்போது பிரம்மனின் மனதிலிருந்து ஒரு மகன் தோன்றினார். அவரே மதங்கர். (மதங்கம் என்றால் யானை.) பிரம்மன் மதங்கரிடம் “தவம் செய்’ என்று கூற, அது பிரளய காலமாதலால் எங்கும் வெள்ளம் சூழ்ந்திருந்தது
அவளுடன் பல
தேவகன்னியர் மதங்க கன்னிகைகள் என உதித்தனர். அனைவரும் கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில்
வீணை மீட்டி இன்புற்றிருந்தனர். அதனால் 'மாதங்கி'
என்று அழைக்கப்படுகிறாள். ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் கரத்தில் உள்ள கரும்பு வில்லில்
இருந்து உண்டானவள். ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி எனும் பராசக்தியின் மந்திரியாய்
விளங்குகிறாள். அவளின் ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள். சங்கீதத்திற்கு இவளே
அதிபதி (அதிஷ்டான தேவதை).
மதுரை மீனாக்ஷி
ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம். மதுரை மீனாக்ஷியே மந்த்ரிணி ரூபம் என்பதால் மீனாஷியே
மாதங்கி ஸ்வருபம் என்றும், தச மஹா வித்தையில் வருபவள் மீனாக்ஷியே என்பர். நீலம்
கலந்த பச்சை நிறத்தில் காட்சி தரும் தேவி சகல செல்வங்களையும் அருளக் கூடியவள்.
என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு
அருள்பவள். ஸ்ரீபுரத்திலுள்ள கடம்பவனத்துள் உலவுபவள் சியாமளா
தேவி. பூவுலகில் கடம்பவனம் என்று போற்றப்படும் மதுரையில், பாண்டிய மன்னன்- காஞ்சனமாலை
ஆகியோரின் வேண்டுதலை ஏற்று அக்னி குண்டத்தில் உதித்தாள் என்பர். மதுரை மீனாட்சி கோவிலில்
சியாமளா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளதாம்.
காளீ தாரா மஹா வித்யா
ஷோடசீ புவனேச்வரீ |
பைரவீச் சின்ன மஸ்தா ச
வித்யா தூமாவதீ ததா ||
மாதங்கீ ஸித்த வித்யா ச
கவிதா
பகலாமுகீ |
ஏதா தச மஹா வித்யா
ஸர்வ தந்த்ரேஷு கோபிதா ||
என்பதாக தசமஹா
வித்யா சொல்லப்படுகிறது. இந்த தசமஹா வித்யா தேவியர் 10 சக்திகளாக உள்ளனர்.
காளீ, தாரா,
ஷோடசீத்ரிபுரஸுந்தரி, புவனேச்வரீ ராஜராஜேஸ்வரீ, ச்சின்னமஸ்தா, பைரவீ, தூமாவதீ,
பகலாமுகீ, மாதங்கீ, கமலா (லக்ஷ்மி) ஆகியோர். தச மஹா வித்யையில் ஒன்பதாவது
ஸ்வருபமாக வருபவள் ஸ்ரீ ராஜமாதங்கி.
மாதங்கியின்
பதினாறு பெயர்கள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. அவை சங்கீத யோகினி, சியாமா, சியாமளா,
மந்த்ர நாபிகா, மந்த்ரிணி, சசிவேசானி, ப்ரதானேசி, சுகப் பிரியா, வீணாவதி, வைணிகி,
முத்ரிணி, பிரிய கப்பிரியா, நீபப்பிரியா, கதம்பேசி, கதம்பவனவாசினி, சதாமாதா
ஆகியவையாகும்.
மாதங்கி தேவி எட்டு
கைகளை உடையவள். ஒரு கையிலுள்ள சம்பா கதிர் உலகியல் இன்பங்களையும்; மற்றொரு
கரத்திலுள்ள தாமரை மலர் கலை உள்ளத்தையும்; இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு
சக்தியையும்; வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல்
ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும்; இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும்
அருளுகின்றன.
வீணை, கிளி,
புத்தகம், தாமரை மலர் ஏந்தி, எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்திலுள்ள சியாமளா தேவியை,
காஞ்சி காமாட்சி கோவில் பிராகாரத்தில் காணலாம்.
ராஜ மாதங்கி
உபாசனையில் பிரதானமாக விளங்குவோர் ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ பாஸ்கரராயர்,
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர். உஜ்ஜயினியில்
இந்த தேவியை வணங்கியே, மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான். காளிதாசனின் சியாமளா
தண்டகம் மேற்கண்ட வடிவுடைய தேவியையே போற்றுகிறது. பேரருள் தரும் தேவி துதியாக
சியாமளா தண்டகம் விளங்குகிறது.
அதில் காளிதாஸர்,
மாதா மரகத ஸ்யாமா
மாதங்கி மதசாலினி
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்பவன வாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய
நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா சுகப்ரியே
என்றும்,
மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம் மதாலஸாம்
மஞ்சுளவாக் விலாஸாம் |
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி ||
சதுர்புஜே சந்த்ரகலாவதம்ஸே குசோன்னதே
குங்கும ராகஸோனே |
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||
புண்ட்ரேக்ஷு பாஸாங்குஸ புஷ்பபாண- ஹஸ்தே நமஸ்தே ஜகதேக மாத: ||
என்றும்
போற்றுகிறார். இவளை உபாசித்தால் வித்தை, தனம் ஆகிய இரண்டையும் அள்ளித்தருவாள்
என்பது காளிதாஸரின் வாக்கு.
சங்கீத
மும்மூர்த்திகளில் ச்யாமா சாஸ்திரிகள் மற்றும் முத்துஸ்வாமி திக்ஷதரவர்கள் ஆகிய
இருவரும் இவளை கானமூர்த்தி / சங்கீத ரஸிகே என்றெல்லாம் கூறிப்பாடியிருக்கிறார்கள்.
இவற்றில் ச்யாமா சாஸ்திரிகள் நவரத்ன மாலா என்று 9 பாடல்களை இந்த அன்னை மீது பாடி
அதற்கு அங்கீகாரமாக யாளிமுக தம்புரா பரிசாக பெற்றதாக கூறுவர்.
த்யானம்:
ச்யா மாங்கீம் சசிசேகராம் த்ரிநயனாம்
ரத்னஸிம் ஹாஸன ஸ்த்திதாம் |
வேதைர்ப்பாஹு தண்டை:
அஸி
கேடக பாசாங்குசதராம் ||
மூல மந்திரம் :
"ஓம் ஹ்ரீம் க்லீம் ஹூம் மாதங்க்யை
ப்பட் ஸ்வாஹா" ||
ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம்
ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி
சர்வஜன மனோஹரி சர்வ முக ரஞ்சனி
க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்
சர்வ ராஜ வசங்கரி சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி
சர்வ துஷ்டமிருக வசங்கரி சர்வ சத்வ வசங்கரி
சர்வ லோக வசங்கரி
த்ரைலோக்யம் மே வசமானய நமோ நமஹா!
“கண் களிக்கும்படி
கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.’
“நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.’
பண் களிக்கும்குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமுமாகி மதங்கர்குல
பெண்தனில் தோன்றிய எம்பெருமாட்டிதன
“நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்
தாயகி ஆதி உடையவள் சரணம் அரண் நமக்கே.’
என்று அபிராமி பட்டர் அன்னை ராஜச்யாமளையை
போற்றுகிறார்.
ராஜ மாதங்கி மூல
மந்திர ஜபம் மற்றும் வழிபாடு அபார தேஜஸும் , வாக் பலிதமும் , கீர்த்தியும்,
ஞானத்தையும் வழங்கும்.
ஸ்ரீ
லலிதோபாக்கியானம், ‘சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா’ என்று துவங்கி
அம்பிகையைப் போற்றுகிறது. கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா’…
(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்) பண்டாசுர வதத்தின் போது,
கேயசக்ர ரதத்தில் இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின்
தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
‘மந்த்ரிண்யம்பா -விரசித-
விஷங்கவத- தோஷிதாயை நம: ” … (ஸ்ரீ லலிதாசஹஸ்ரநாமம்). சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால்,
அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே
விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான்.
சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும்
அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.
“மாதங்கி சாமளையாம்
பண்டை படிவைத்து உலகாள்’
என்று குறிப்பிடுகிறது உலகம்மை கலித்துறை அந்தாதி என்னும் நூல்.
“ஸங்கீத யோகினி, ஸ்யாமா, ஸ்யாமளா, மந்த்ரிணி, மந்த்ரிநாயகி, சஸிவேஸானி, ப்ரதானேஸி, சுகப்ரியா, வீணாபதி, ஸமுத்ரிணி, நீலப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாஸினி, ப்ரியசப்ரியா’ என்றெல்லாம் லலிதா உபாக் யானம் சியாமளாவைத் துதிக்கிறது.
“சரிகமபத நிரதாம் வீணா
ஸங்க்ராந்த ஹஸ்தாம்
ஸாந்தாம் ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபர காந்தாம் நமாமி
சிவ காந்தாம்’
பண்டை படிவைத்து உலகாள்’
என்று குறிப்பிடுகிறது
“ஸங்கீத யோகினி, ஸ்யாமா, ஸ்யாமளா, மந்த்ரிணி, மந்த்ரிநாயகி, சஸிவேஸானி, ப்ரதானேஸி, சுகப்ரியா, வீணாபதி, ஸமுத்ரிணி, நீலப்ரியா, கதம்பேசி, கதம்பவனவாஸினி, ப்ரியசப்ரியா’ என்றெல்லாம் லலிதா உபாக் யானம் சியாமளாவைத் துதிக்கிறது.
“சரிகமபத நிரதாம் வீணா
ஸங்க்ராந்த ஹஸ்தாம்
ஸாந்தாம் ம்ருதுள ஸ்வாந்தாம்
குசபர காந்தாம் நமாமி
சிவ காந்தாம்’
ருதுவாகாத
பெண்கள் இவள் ஆராதனையால் ருதுவாவார்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன்,
மனைவி மீண்டும் ஒன்று சேர்வர். சோம்பல், பயம், துக்கம் இம்மூன்றும் இவளை
ஆராதிப்பவர்களுக்குக் கிடையாது. மாதங்கி உபாசனையைச் செய்தால் வெகு சீக்கிரத்தில்
உலகத்திலேயே மிகச் சிறந்தவராக விளங்கலாம். உலகைத் தன் வசம் கொள்ளலாம்.
வடநாட்டில் ஷ்யாமளா
வழிபாடு மிகப் பிரபலமானது. சியாமளா நவரத்னமாலை, சியாமளா ஆவரணம், மாதங்கி
ஸஹஸ்ரநாமம், சியாமளா தண்டகம், சியாமளா கவசம், மாதங்கி ஹ்ருதயம், ராஜமாதங்கி
மந்த்ரம், மாதங்கி ஸ்தோத்திரம், மாதங்கி ஸுமுகி கவசம், ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம் போன்ற
பல துதிகள் இந்த அன்னையின் புகழைப் போற்றுகின்றன.
மாதங்கி அவதாரத்தைப்பற்றி, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு தலபுராணத்தில்
கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ
ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி, சித்திரை மாதம்
வளர்பிறை,மாசி மாதம் வளர்பிறைகளிலும் வழிபட, பூஜை செய்ய இவள் பேரருள்
பெறலாம்.நாமும் லோக மாதா ஸ்ரீ ராஜ மாதங்கி என்னும் ராஜஷ்யாமளா தேவியை வணங்கி அருள்
பெறுவோம்.
Great info thanks to Mr. Raghu
ReplyDeleteExcellent collection.
ReplyDeleteபுதிய தகவல்கள் பல நிறைந்த பதிவு. தேவியின் கடாக்ஷம் அனைவர்க்கும் கிடைக்க ப்ரார்த்தனை செய்வோம்.ஜேய் சாய் ராம்.
ReplyDeleteஎங்கள் குல தெய்வம் சப்த கன்னி. தூத்துக்குடி மாவட்டம். சப்த கன்னிகள் பற்றி கொஞ்சம் அறிவேன். மாதங்கிதேவி பற்றிய பதிவு அருமை. மீதமுள்ள தேவிகளின் தகவல்கள் முடிந்தால் பதிவு செய்யவும். மிக்க நன்றி.
ReplyDeleteRaghu, excellent info & I have no words to express my gratitude.
ReplyDeleteExcellent info Raghu...I really appreciate the pain in puvlishing such a wonderful story.
ReplyDeleteNice excellent!!! Ragu ji.
ReplyDeleteExellentnt Raghu.....thanks for sharing
ReplyDeleteSuper post Raghu Ji, Enjoyed locked in home Bombay Sisters singing so nicely, thank you very much for sharing
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னு தெரியல ரகு. ஸ்ரீ மாதங்கி தேவி பற்றி அறிந்திராத அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல. With slogams and Bombay sisters voice no words, continue the good spiritual works
ReplyDeleteExcellent hard work No one give such rare information In between article you have given selective slogams Marvelous & Spiritual hardwork done by Mr Raghuraman My blessings for your continuous work keep it up👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteExcellent hard work No one give such rare information In between article you have given selective slogams Marvelous & Spiritual hardwork done by Mr Raghuraman My blessings for your continuous work keep it up👌🏻👌🏻👌🏻👌🏻
ReplyDeleteNice
DeleteNice post. Rare information. Great work.
ReplyDeleteDear sir,Very useful information about shree mathangi devi.Thank you for your sharing.
ReplyDeleteExcellent
ReplyDeleteBhargavi
மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDeleteஉங்களின் பதிவ மீண்டும் தொடர எங்களின் வாழ்த்துக்கள்.
Very rare collection of information about Dasa Maha Vidhya Sri Rajamadhangi Devi. She is mantrini of Sri Raja Rajeswari. Those who would like to excel in studies, arts etc. Should medidate on Sri Rajamadhangi Devi. She is Vaak Devatha. Really wonderful collection with selective Sthotras. God Bless You!
ReplyDeleteSuggestion: you can attempt to narrate all remaining Dasa Maha Vidhya as well. Since Dasa Maha Devi is an very interesting one to know and medidate.
Very useful information to know about Sri Rajamathangi devi
ReplyDeleteNice post raghu
Also please post about Lord Muneeswaran
heart warming
ReplyDelete🙏🙏
ReplyDeleteஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ அநேக ஆசீர்வாதங்கள் சகல செளபாக்யங்களும் பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
ReplyDeleteபுத்தியில் அறிவுச்சுடரை தூண்டியமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteவாழ்க வளமுடன்!-என்றும்
வளர்க நலமுடன்!!
என்றும் அன்புடன் உங்கள் வசிகா
ReplyDeleteநன்றி..நன்றி...நன்றி 9092895090