Monday, September 4, 2023

அனைவருக்கும் வணக்கம். ஜெய் ஸ்ரீராம். தொடர்ந்து தாங்கள் ஜானகி பதிப்பக புத்தகத்திற்கு அளிக்கும் ஆதரவிற்கு அடியேன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.ஜானகி பதிப்பகத்தின் அடுத்த உன்னத படைப்பு "அபூர்வ ஸ்லோகங்களும் அற்புதமான பலன்களும்" என்னும் புத்தகத்தில் 30 அரிய ஸ்லோகங்கள் எளிய தமிழ் அர்த்தத்துடனும், பாராயண பலன்களுடனும் மிகவும் விரிவாக தொகுக்கப்பட்டு, மருதாநல்லூர் ஸ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளின் பட்டாபிஷேக வைபவத்தன்று ஸ்ரீஸ்வாமிகளின் திருக்கரங்களினால் 03-09-2023 அன்று மருதாநல்லூர் ஸ்ரீ ராதா கிருஷ்ண மடத்தினில் வெளியிடப்பட்டது. இப்புண்ணிய நூலுக்கு சுயமங்களாசாசனம் அருளிய ஸ்ரீ மகா பரப்ரம்ம பீடம் ஸ்ரீ உத்கீத ஜீயர் மடம் ஸ்ரீ உத்கீத சங்கர மடம் ஸ்ரீ பரமாத்மாத்வைத கோதண்டி ஸ்ரீ கேசவானந்த ஜீயர் ஸ்வாமிகளுக்கும், தனது இடையறாத பணிகளிலும் மலர்ந்த முகத்துடன் ஆசியுரை வழங்கி அனுகிரஹித்த ஸ்ரீ பரத்வாஜ் ஸ்வாமிகளுக்கும் அடியேனின் நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவரும் இப்புண்ணிய ஸ்லோகங்களை உச்சரிப்பு பிழையின்றி அர்த்தத்துடன் பாராயணம் செய்து அனைத்து மனோபீஷ்டங்களும் பூர்த்தியாக ஸ்ரீமன் நாராயணரின் பரிபூரண க்ருபா கடாக்ஷம் பெற வேண்டுகின்றேன். இப்புத்தகத்தைப் பெற வேண்டுவோர் அடியேனின் தொலைபேசியை (9940349593) அணுகவும். விலை 250 (Including courier charges) என்றும் இறை பணியில், அடியேன், மதுரை சு. ரகுராமன் ஜானகி பதிப்பகம்